BSNL செல் கோபுரங்களை பிரித்து, தனி நிறுவனம் அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, திரு. அமித் யாதவ் IAS அவர்களை CMD ஆக நியமித்திருக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் (All Unions & Associations of BSNL) சார்பாக, 08.01.2018 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப் பட்டிருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில், 08.01.2018 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தோழர்கள் S . ஹரிஹரன் (BSNLEU), A. மோகன்குமார் (SNEA), R . பிரசாத் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம், SNEA மாவட்ட செயலர் தோழர் R .மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தோழர்கள் M .R .தியாகராஜன், மாநில உதவி தலைவர், SNEA, K . கோவிந்தராஜ், CWC உறுப்பினர், AIBSNLEA, S. தமிழ்மணி, மாநில உதவி தலைவர், BSNLEU , ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 தோழர்கள் (30 பெண்கள் உட்பட ) திரளாக கலந்து கொண்டனர். SNEA மாவட்ட பொருளர் தோழர் S . சேகர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்