08/01/2018 அன்று டெல்லியில், அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. All Unions and Associations of BSNL பதாகையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BTEU, SEWABSNL, TEPU, AIGETOA, BSNLMS, BSNLOA, ATM மற்றும் TOABSNL
சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.
01. 30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது சமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு, அன்றிலிருந்து 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்துவது. மாநில, மாவட்ட மட்டத்திலும் சத்தியாகிரக போராட்டம் நடத்துவது.
02. 30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில், காலவரையற்ற "விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்" போராட்டம் நடத்துவது.
03. 28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
04. ஒரு வார காலத்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.
05. அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்
சந்தித்து ஆதரவு கோருதல்.
06. செல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம் எதிர்த்து
சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
07. போராட்டங்களை கண்காணிக்க BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA பொது செயலர்களை கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்குவது.
கோரிக்கைகள்
* 01/01/2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்து, இரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரி செய்திடு!
* செல்கோபுரம் துணை நிறுவன உருவாக்கும் முடிவை கைவிடு!
* ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைக்காதே, VRS திட்டம் வேண்டாம்!
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்