ஐந்து நாள் போராட்டத்தில், முதல் நாள் நிகழ்வாக, 30.01.2018 அன்று முதலில், சேலம் பழைய பேருந்து நிலையம், ஓரியண்டல் தியேட்டர் அருகில் உள்ள தேச தந்தை சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிரதாஞ்சலி செலுத்தினோம்.
பின்னர் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் அமைதி ஊர்வலமாக சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தை அடைந்தோம்.
சத்யாகிரக போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), V. சண்முகசுந்தரம் (SNEA), R . மணிகண்டன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர் .
மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் S .தமிழ்மணி (BSNLEU), M .R .தியாகராஜன் (SNEA), K. கோவிந்தராஜ் (AIBSNLEA) சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர்கள் தோழர்கள் E . கோபால் (BSNLEU), R . மனோகரன் (SNEA), M . சண்முகசுந்தரம் (AIBSNLEA) ஆகியோர் விளக்கவுரை வழங்கினார்கள்.
சுமார் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் மாவட்டம் முழுவதிலுமிருந்து, கலந்து கொண்டனர். முதல் நாள் போராட்டத்தை தோழர் S . ஹரிஹரன்(BSNLEU) நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்