Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 8, 2018

சேலம் உருக்காலையை பாதுகாக்க தர்ணா - 08.02.2018


சிஐடியூ தமிழ்மாநிலக்குழு சார்பில், சேலத்தில் பெருந்திரள் தர்ணா
போராட்டம்



சேலம்  உருக்காலையை  பாதுகாக்க கோரி சிஐடியூ தமிழ் மாநிலக்குழு சார்பில்  மாநிலம் தழுவிய மாபெரும் தர்ணா போரட்டம் இன்று 8.2.2018 சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10.00 மணியளவில் சிஐடியூ சேலம் மாவட்ட தலைவர், தோழர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.   சிஐடியூ தமிழ்மாநில தலைவர் தோழர். A.சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

தர்ணாவில் சிஐடியூ மாநில செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில நிர்வாகிகள் ஆர்.சிங்காரவேலு, கே.சி.கோபிகுமார், கே.விஜயன், சிஐடியூ சேலம் மாவட்ட  செயலாளர் டி.உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P.ராமமூர்த்தி , சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வெங்கடபதி, வி.இளங்கோ, ஏ.கோவிந்தன், ஆர்.வைரமணி, சேலம் உருக்காலை பாதுகாப்பு குழு கன்வீனர் கே.பி.சுரேஷ்குமார் உள்ளிட்ட சிஐடியூ அனைத்து சங்க நிர்வாகிகள், தோழர்கள், சேலம் உருக்காலை தொழிலாளர்கள், பெண்கள் என 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில், கலந்து கொண்டோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்