23.02.2018 அன்று நடைபெற்ற மகத்தான பேரணிக்கு பின், அன்றே தொலைத்தொடர்பு செயலர் திருமதி அருணா சௌந்தர்ராஜன் அவர்களை நமது தலைவர்கள் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக, 24.02.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் நமது தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பிரதான கோரிக்கையான, ஊதிய மாற்றம் சம்மந்தமாக, BSNL ஊழியர்கள்/அதிகாரிகள் ஊதிய மாற்றம் செய்யத் தகுதியற்றவர்கள் என்ற DoT வாதத்தை, நமது தலைவர்கள், முதலில் உடைத்தனர். நமது தலைவர்களின் வாதத்தை கேட்ட பின், BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
அதற்கு ஏதுவாக, DOT செயலர், DPE-ஐ அணுகி கொடுக்கும் திறன் (affordability) என்ற நிபந்தனையில் இருந்து BSNLக்கு விலக்கு பெறவேண்டும் என்றும், அதன் பின்தான் அதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளையும் தாம் செய்வதாகவும் உறுதியளித்தார். அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய மாற்றக்குழுவை DPE வழிகாட்டல்படி, BSNL உடனடியாக அமைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியில், அமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை, நாம் வேறு வழிகளை காண வேண்டிய அவசியம் உள்ளது.
பென்ஷன் பங்களிப்பு சம்மந்தமாக அரசாங்க வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், தீர்வு காண DoT செயலருக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் சம்மந்தமாக DOT செயலரிடம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறினார்.
BSNLல் பனிபுரிவோரின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
ஒன்றுபட்ட போராட்டத்திற்கு, முயற்சி செய்து வெற்றிகரமாகிய அனைத்து சங்க தலைவர்களுக்கும், பேரணியில் திரளாக பங்குபெற்று, அரசாங்கத்தின் நிலை பாட்டை மாற்றிய தோழர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின், புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்