சேலம் MAIN தொலைபேசி நிலையம்,
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் 22.03.2018 அன்று FNTO சங்க அலுவலகத்தில் புதுடெல்லியில் கூடி விவாதித்தனர்.
இந்தக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO SEWA BSNL, BSNLMS, BSNLOA தலைவர்கள் பங்கு பெற்றனர். அரசாங்கத்தின் இந்த முயற்சியினை தடுத்து நிறுத்த உடனடியாக கீழ்கண்ட இயக்கங்களை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
* 2018 மார்ச் 27 அன்று மாவட்ட, மாநில தலைநகர்கள் மற்றும் சஞ்சார் பவன் முன்பு மதிய உணவு நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது.
* அன்றைய தினமே சஞ்சார் பவனில் மத்திய அமைச்சருக்கு ஒரு மகஜர் கொடுப்பது.
* அதே மகஜரை மாநில தலைமை பொது மேலாளர்கள் மற்றும் மாநில ஆளுனர்களிடம் வழங்கி அதனை மாண்பு மிகு மத்திய அமைச்சருக்கு அனுப்ப செய்வது.
மத்திய சங்கங்களின் அறைகூவலிக்கிணங்க , நமது மாவட்டத்தில், 27.03.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E . கோபால்,
கன்வீனர், AUAB