அருமை தோழர்களே! AIRCEL நிறுவனம் தனது சேவையை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டு, திவால் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பொது துறை நிறுவனமான, நமது நிறுவனத்தை நோக்கி AIRCEL வாடிக்கையாளர்கள் வர துவங்கியுள்ளனர்.
UPC Code எடுப்பது உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல்களை AIRCEL வாடிக்கையாளர்கள் சந்தித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை, BSNL அதிகப்படுத்துவதற்கு, இது ஒரு பொன்னான தருணம்.
எனவே, நமது தோழர்கள் கூடுதல் முயற்சி செய்து, அதிக AIRCEL வாடிக்கையாளர்கள் BSNL நிறுவனத்திற்கு வருவதற்கு உதவ வேண்டும். நமக்கும் ஊழியர் பற்றாக்குறை, கருவிகள் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், கூடுதலாக சில முயற்சிகள் செய்து உதவுமாறு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் அனைத்து தோழர்களுக்கும் அன்பான வேண்டுகோள் விடுக்கிறது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்