Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 15, 2018

மூன்றாவது ஊதிய மாற்றம் - முன்னேற்றங்கள்

 Image result for negotiation

நாடு முழுவதும் BSNL ஊழியர்கள், அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கும் மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக DoT துறையின், உயர் அதிகாரிகளில் ஒருவரான, திரு. பவன் குப்தா, Director (PSU), அவர்களை நமது பொது செயலர், தோழர் 
P. அபிமன்யூ, இன்று, (15.03.2018) டில்லியில் சந்தித்து நமது 
கோரிக்கையை விவாதித்தார். 

24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின், மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இயக்குனர் PSU, அவர்கள் நமது தலைவரிடம் DPE ஒப்புதலுக்காக. கோப்புகள் தயாராகி வருவதாக சாதக பதில் வழங்கியுள்ளார். 

ஆனால், மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு இன்னும் பல நடைமுறைகள்  பின்பற்ற வேண்டிய நிலை உள்ளதாக இந்த சந்திப்புக்கு பின் நமது பொது செயலர் மத்திய சங்க இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நமது பொது செயலர் நடைமுறைகளை வேகப்படுத்த DoT அதிகாரியிடம் கோரியுள்ளார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்