12.04.2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை
சேலம் MAIN தொலைபேசி நிலையம்
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக, 27.03.2018 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. அந்த போராட்டம் நமது மாவட்டம் உட்பட நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டங்களை முடிவு செய்ய 27.03.2018, அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL மத்திய சங்க தலைவர்கள் டில்லியில் ஒன்றுகூடி, விவாதித்தனர். போராட்டத்தை தீவரபடுத்தும் விதமாக 12.04.2018 அன்று மாவட்ட, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் முன்பு பெருந்திரள் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டது.
போராட்டத்தை நமது சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்க, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO மாவட்ட செயலர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். அதன் முடிவாக, 12.04.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை நேர தர்ணாவாக, போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாலை 3 மணிக்கு துவங்கி 6 மணி வரை சக்தி மிக்க போராட்டமாக நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும், திரளாக தர்ணாவில் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E , கோபால்,
கன்வீனர், AUAB