Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, April 14, 2018

AUAB சார்பாக தர்ணா...



தனி துணை டவர் நிறுவன உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, 12.04.2018 அன்று நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்த AUAB கூட்டமைப்பு சார்பாக அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. நமது மாவட்ட சங்கங்களின் முடிவின்படி, 12.04.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு "மாலை நேர தர்ணா" போராட்டம் நடத்தப்பட்டது. 

போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), 
K. சுப்பிரமணியம் (SNEA), R . மணிகண்டன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினார்கள். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி, போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். 

தோழர்கள் N . கமலக்கூத்தன், (FNTO), N. சந்திரசேகரன் (SNEA), 
M . செல்வம் (TNTCWU), K . கோவிந்தராஜன்( AIBSNLEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தோழர்கள் M . சண்முகசுந்தரம்(AIBSNLEA). R . மனோகரன்(SNEA), 
S . ஹரிஹரன்(BSNLEU) ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் P . தங்கராஜு (BSNLEU) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்