Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 24, 2018

தெரு முனை பிரச்சார கூட்டம் - அனைத்து சங்க கூட்ட முடிவுகள்



அனைத்து சங்க  (All Unions and Associations of BSNL) கூட்டம், இன்று, (24.04.2018), டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BSNL MS, BSNL ATM, BSNL OA சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். தனி துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின நாசகர முடிவு சம்மந்தமாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

19.04.2018 அன்று நடந்து முடிந்த கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சம்மந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. போராட்டம் நடத்த பல மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டதையும் கூட்டம் விவாதித்தது. மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாகவும் கூட்டம் பரிசீலித்தது.

விரிவான பரிசீலினைக்குப்பின் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 


01.தனி துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவு மற்றும் BSNL விரோத மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, 07.05.2018 முதல் 11.05.2018 வரை நாடு முழுவதும் தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது.  

02. கடைசி நாள், 11.05.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடத்தி, தனி நிறுவன முடிவை எதிர்த்து பிரதமருக்கு FAX அனுப்புவது.

03. ஊதிய மாற்றம் சம்மந்தமாக DPE பதில் அளித்துள்ளது. DoT இனி மத்திய அமைச்சரவை முடிவுக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரை உடனடியாக சந்திக்க ஏற்பாடு செய்வது, அதில், ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பது.

04. தனி நிறுவனம் சம்மந்தமாக தேசிய கருத்தரங்கம் 09.05.2018 அல்லது 10.05.2018 அன்று நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால்  தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், கருதரங்கத்தை தள்ளி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேதி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

05. அடுத்த AUAB கூட்டம் 08.05.2018 அன்று காலை 11.30 மணிக்கு AIBSNLEA சங்க அலுவலகத்தில் நடைபெறும். 

தோழர்களே! "கண்ணின் இமையாம்" டவர்களை காக்க, AUAB கூட்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுல் படுத்துவோம்! நிறுவனத்தை காப்போம்!!

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்