BSNLEU தமிழ் மாநில சங்க செயற்குழு கோவையில் இன்று, (28.04.2018) துவங்கியது. மாநில தலைவர் தோழர் S . செல்லப்பா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரை வழங்கினார்.
மத்திய சங்க அமைப்பு செயலர் தோழர் M . விஜயகுமார் செயற்குழுவை துவக்கி வைத்தார். பொது செயலர் தோழர் P . அபிமன்யூ சிறப்புரை வழங்கினார். பின்னர் செயற்குழு உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று வருகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்