Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, April 8, 2018

"YES WE CAN" - நம்மால் முடியும்!

Image result for target exceeded


மார்ச் மாதம் சிம் விற்பனையில், நமது BSNL நிறுவனம் புதிய சாதனைகளை படைத்துள்ளதாக, திரு. R .K .மிட்டல், DIRECTOR(CM), கார்ப்பரேட் அலுவலகம், டில்லி, தனது 03.04.2018 தேதியிட்ட D.O. கடிதம் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். சுமார் 23 லட்சம் சிம்கள் விற்க மார்ச் மாதத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும், சுமார் 39 லட்சம் சிம்கள் விற்பனை ஆகியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை.

நமது தமிழ் மாநிலத்தில் மட்டும், 11,00,256 சிம்கள் விற்று புதிய மைல் கல்லை தொட்டுள்ளோம். ஒட்டு மொத்தமாக, 2017-18 ஆண்டில், 27,62,090 சிம்கள் விற்று, தமிழகம் இலக்கை மிஞ்சிய மாநிலமாக திகழ்கிறது.

நமது சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மார்ச் மாதத்தில் 1,08,921 சிம்கள் விற்று இமாலய சாதனை படைத்துள்ளோம். 2017-18 ஆண்டில் மொத்தமாக, 2,40,137 சிம்கள் விற்று, சிம் விற்பனையில் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளோம். 

புதிய சாதனைகளை படைக்க கடுமையாக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 

தோழர்களே! நமது மாவட்டத்தில், நமது  மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், தோழர்கள் நேரம் காலம் பாராமல், தன்னுடைய பணி இல்லை என புறம் தள்ளாமல் பல இடங்களில் தாமாக முன்வந்து விற்பனையில் ஈடுபட்டதால் இந்த சாதனை நமதாகியுள்ளது. சேலம் மாவட்ட சங்கம் அந்த தோழர்களை மனதார பாராட்டுகிறது. 

பல ஊர்களில் வேலை நேரத்தை தாண்டியும் மணிக்கணக்காக உழைத்த நமது OS / AOS / JE / TT  / ATT தோழர்களின் பணி மகத்தானது. பல வாடிக்கையாளர் சேவை மையங்களில் கடுமையான ஆட் பற்றாக்குறை நிலவிய போதும், கருவிகள் பல பழுதாகி தொல்லை கொடுத்த போதும், வந்த வாடிக்கையாளர்ளை புன்னைகையுடன் ஊழியர்கள் வரவேற்றத்தால் தான் இது சாத்தியமாகியது. 

மாவட்ட சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பெயர், முகம் கூட அடையாள படுத்தாமல் உழைத்த எம் தோழனுக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். குழந்தைகளின் பொது தேர்வுக்காக கூட விடுப்பு எடுக்காமல் பணி புரிந்த எம் பெண் தோழியர்களின் பணி மகத்தானது.  

மொத்தத்தில், "நம்மால் முடியும்" என நிரூபித்துள்ளோம். ஊழியர்களின் பணியை கௌரவப்படுத்த AGM (CSC), சேலம் 03.04.2018 அன்று சிறிய நிகழ்வை அவருடைய அறையில் ஏற்பாடு செய்திருந்தார். நமது மாவட்ட சங்கத்தை அழைத்து இனிப்பு வழங்கி, நன்றி தெரிவித்தார். 

வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
DIRECTOR(CM) அவர்களின் D.O. கடிதம் காண இங்கே சொடுக்கவும் 
விற்பனை தகவல் காண இங்கே சொடுக்கவும்