அருமை தோழர்களே! நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், 23.05.2018 அன்று எடப்பாடி, ஸ்ரீ பருவதராஜகுல சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி நிரலில், கொடியேற்றத்துக்கு பின் முதல் நிகழ்வாக சேவை கருத்தரங்கம் காலை 11.00 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
பின்பு செயற்குழு நடைபெறும். மாலை 05.00 மணிக்கு தோழர்கள் N. குமார் மற்றும் N. தாமரைச்செல்வன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெறும். "முப்பெரும் விழாவாக" மூன்று நிகழ்வுகளையும் நடத்த உள்ளோம். சேவை கருத்தரங்கில் பங்கு பெறுபவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. கிளைகள், தோழர்கள் திரளாக பங்கேற்பதை உத்தரவாத படுத்த வேண்டும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்