03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு, நிறுவன நல, ஊழியர் நல கோரிக்கைகளை வலியுறுத்தி, 03.05.2018 அன்று கறுப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, "கோரிக்கை தினம்" கடைபிடிக்க போராட்ட அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக கிளைகளிலும், 03.05.2018, வியாழன் அன்று பொறுப்பு மாவட்ட நிர்வாகிகளை வைத்து மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சேலம் நகர கிளைகள் சார்பாக, மாலை 5 மணிக்கு சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கிளை சங்கங்கள் போராட்டத்தை சக்தி மிக்கதாக நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாதிரி அட்டை காண இங்கே சொடுக்கவும்
மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்