செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் துவங்கும் மத்திய அரசின் BSNL விரோத முடிவினை எதிர்த்து
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில், 28/05/2018 அன்று நாடு முழுவதும் வெளிநடப்பு போராட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
நமது அறிவிப்பினைத் தொடர்ந்து, 24.05.2018 அன்று AUAB சங்கத்தலைவர்களை அழைத்து BSNL CMD பேசினார். மாலை 04.30 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை, இரண்டு மணி நேரம் நீடித்தது. 28/05/2018 அன்று, ஹைதராபாத்
நகரில் கூடவுள்ள BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது என்றும் நிகழ்ச்சி நிரலில் அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார். எனவே 28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம், பேரணி உள்ளிட்ட இயக்கங்களை கைவிட வேண்டும் என கோரினார்.
அதற்கு பின், AUAB கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடி நிலைமையை விவாதித்தனர். BSNL CMD ன் உறுதி மொழியை ஏற்று, இயக்கங்களை ஒத்தி வைப்பது என முடிவு எடுத்தனர்.
AUAB அமைப்பின் போராட்ட அறைகூவலே, இந்த வெற்றிக்கு காரணம். தனி நிறுவன நாசகர முடிவு கைவிடப்படும் வரை
தொடரட்டும்!
நமது போராட்டக்கனல்!!.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்