நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, மற்றும் துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் டில்லியில் மனித வள இயக்குனர் திருமதி சுஜாதா ராய் அவர்களை 17.05.2018 அன்று சந்தித்து, கீழ்கண்ட முக்கியமான பிரச்சனைகளை விவாதித்தனர்.
அனைத்து பிரச்சனைகளையும் சாதகமாக பரிசீலிப்பதாக மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.
* அனாவசிய செலவீனங்கள் மீதான நமது சங்க குறிப்பினை அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும்.
* ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் சம்மந்தமாக விவாதிக்க ஒரு குழுவினை விரைவாக அமைக்க வேண்டும்.
* ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வவுச்சர் இல்லா மருத்துவ அலவன்ஸ் 6 மாதத்திற்கு பின்னரும் தொடர வேண்டும்.
* BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை சிம்மில் ரூ.429 போன்ற ஒரு திட்டத்தை உடனடியான வழங்க வேண்டும்.
* 2008ம் ஆண்டு நடைபெற்ற DR TTA தேர்விற்கு வழங்கியது போல், சமீபத்தில் நடைபெற்ற JE LICE தேர்விற்கும் மதிப்பெண்களில் தளர்வு வழங்க வேண்டும்.
* இயக்குனர் குழு ஓப்புதலுக்காக, தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.
தோழமையுடன்
E .கோபால்,
மாவட்ட செயலர்