AUAB கூட்டமைப்பின் அவசர கூட்டம், 23.05.2018 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.அவசர கூட்டத்திற்கான தேவை எதனால் ஏற்பட்டது என்றால், இதுவரை புது டெல்லியில் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்று வந்த BSNL இயக்குனர் குழு கூட்டங்கள், 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. எப்போதும் டெல்லியில் நடைபெறும் இயக்குனர் குழு கூட்டம், திடிரென்று ஹைதராபாத்தில் நடைபெற வேண்டிய அவசியம் என்ன?
தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலை ஏற்று, துணை டவர் நிறுவனம் செயலாக்கத்தை அமலாக்கவே எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அமைதியாக இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஹைதராபாத்தில் நடத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த சூழ்ச்சியை உணர்ந்து, 23.05.2018 அன்று மதியம் இரண்டு மணிக்கு புது டெல்லியில், AUAB கூட்டமைப்பின், அவசர கூட்டம் நடைபெற்றது. AIBSNLEA பொது செயலாளர் தோழர் பிரகலாத்ராய் அவர்களின் தலைமையில், NFTEBSNL சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. 28-05-2018 அன்று அனைத்து சங்கங்களின் பொதுச் செயலர்கள் ஹைதராபாத் செல்வது. BSNL இயக்குனர் குழுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்துவது.
2. 28.05.2018 அன்று நாடுமுழுவதும் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து வெளி நடப்பு செய்து, துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக பேரணிகளை நடத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு இயக்கம் நடத்துவது.
மத்திய அரசு மற்றும் BSNL நிர்வாகத்தின் சூழ்ச்சியை முறியடியக்க, அயராது தொடர்ந்து போராடுவோம். நிறுவனத்தை காப்போம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB சேலம்
AUAB போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்
AUAB ஊழியர்களுக்கு போராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்