19.06.2018 அன்று ஆத்தூர் நகர, ஊரக, மற்றும் வாழப்பாடி கிளைகளின் இணைந்த 9வது மாநாடு, ஆத்தூர் தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர்கள் தோழர்கள் P . குமாரசாமி, B . பெரியசாமி, C .K . பழனிசாமி தலைமைக்குழுவாக செயல்பட்டார்கள்.
முதல் நிகழ்வாக தேசிய கொடியை மூத்த தோழர் M . மனோகரன் ஏற்ற, சங்க கொடியை தோழர் K . வரதராஜன், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின், தோழர்கள் மாநாட்டு அரங்கை அடைந்தனர். தோழர் A . அருள்மணி, கிளை செயலர், நகரம், அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் G. R . வேல் விஜய், கிளை செயலர், ஊரகம், அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.
தோழர்கள் M . விஜயன், மாவட்ட தலைவர், P . தங்கராஜ், மாவட்ட பொருளர், S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், P.M. ராஜேந்திரன்,மாவட்ட உதவி பொருளர், R . ஸ்ரீனிவாசன், மாவட்ட அமைப்பு செயலர், P . சண்முகம், கிளை செயலர், எடப்பாடி, CITU தோழர் M . முருகேசன், ஓய்வு பெற்ற மூத்த தோழர் V. சின்னசாமி, M . செல்வம், மாவட்ட செயலர் TNTCWU, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர்கள் A . அருள்மணி, G.R .வேல் விஜய், M . சேகர், முறையே ஆத்தூர் நகர, ஊரகம் மற்றும் வாழப்பாடி கிளை செயலர்களாக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றிய பின், தோழர் S . யாதீஸ்ராஜ், கிளை உதவி செயலர், வாழப்பாடி நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். கொடிகள், தோரணங்கள், விளம்பரங்கள், முழுமையான ஊழியர் பங்கேற்பு, சுவையான சிற்றுண்டி, என நேர்த்தியான ஏற்பாடுகள் செய்த கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்