நாம் பெருமையுடன் ஊழியர்களுக்கு பெற்று கொடுத்த ரூ.429.00 மாதிரியான புதிய திட்டம் 01.07.2018 முதல் அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை CMTS நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதற்கான குறுஞ்செய்தி ஊழியர்களின் சேவை சிம்மிற்கு, வந்துவிட்டது. அதன்படி, ஊழியர்கள் 01.07.2018 முதல் தங்கள் சேவை சிம்மிலிருந்து, அனைத்து நிறுவனங்களுக்கும் அளவற்ற அழைப்புகள் மேற்கொள்ளலாம். தினமும், 100 SMS மற்றும் 1GB டேட்டா இலவசம்.
====================================================================
அகர்தலா மத்திய செயற்குழு முடிவின்படி, நமது சங்கத்தின், 9வது அகில இந்திய மாநாடு மைசூரில், 2019 ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.
====================================================================
AUAB யின் CORE COMMITTEE தலைவர்களுடன் நமது CMD நடத்திய பேச்சு வார்த்தையின் போது நிதி நெருக்கடி காரணமாக ஊதியம் வழங்கும் தேதிகளில் மாற்றம் நடைபெறும் என தகவல் தெரிவித்தார். அது சம்மந்தமாக உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Gr A அதிகாரிகளுக்கு, பிரதி மாதம் 5ஆம் தேதிகளிலும், மற்றவர்களுக்கு மாதத்தின் முதல் தேதியில் இனி சம்பளம் வழங்கப்படும்.
====================================================================
சிறு குடும்ப முறையை ஊக்குவிக்க மத்திய அரசு வழங்கிவந்த குடும்ப கட்டுப்பாடு ஊக்க தொகையை 01.07.2017 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி விட்டது. இதனை காரணம் காட்டி, BSNL நிர்வாகமும் 01.07.2018 முதல் நமது ஊழியர்களுக்கு நிறுத்துவதாக உத்தரவு வெளியிட்டுள்ளது.
====================================================================
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கூட்டு குழுவை அமைத்திடுமாறு தொடர்ந்து நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி வந்தது. அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் கூட்டு குழு அமைக்கப்படும் என GM (SR) உறுதியளித்துள்ளார்.
====================================================================
குழந்தை பராமரிப்பு விடுப்பு குறித்த மத்திய அரசாங்க உத்தரவுகளை BSNLலும் Endorse செய்து உத்தரவு வெளியிடவேண்டும் என நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, அனைத்து அரசாங்க உத்தரவுகளும் BSNL லில் நடைமுறை படுத்துவதற்கான உத்தரவை வெளியிட GM (Estt ) உறுதி அளித்துள்ளார்.
====================================================================
TT இலாக்கா போட்டி தேர்வு விதிகளில், கல்வி தகுதியில் ஒரு முறை சலுகை வழங்க நாம் பல கூட்டங்களில் கோரிக்கை எழுப்பி வந்தோம். மீண்டும் 19.06.2018 அன்று GM (Estt ) அவர்களை சந்தித்தபோது, இந்த கோரிக்கையை நமது சங்கம் விவாதித்தது. கோரிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக GM (Estt) உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்