மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமான தற்போதைய நிலவரத்தை அறிந்து ஊழியர்களுக்கு தெரியப்படுத்த, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, 31.05.2018 அன்று, DOTயில் உள்ள Director(PSU-1) திரு பவன் குப்தா அவர்களை சந்தித்து ஊதிய மாற்றம் சம்மந்தமாக விவாதித்தார்.
BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருவதாக DoT அதிகாரி, நமது பொது செயலரிடம் பதில் அளித்தார்.
அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தியுள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்