Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 5, 2018

BSNLEU சங்கத்தின் மற்றுமொரு சாதனை! ஊழியர்களுக்கு அளவில்லா அழைப்புகள், DATA வசதியுடன் கூடிய சேவை சிம்!

Related image


நமது BSNLEU சங்கம், ரூ. 429.00 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL வாடிக்கையாளர்களுக்கு, BSNL  நிறுவனம் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, இந்த வசதி, "ஊழியர்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்" என கோரிக்கை வைத்தது. 

BSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்திய போது, 90 நாட்களுக்கு அனைத்து நிறுவனங்களுக்கும் 
அளவில்லா அழைப்புகள், தினமும் 1GB டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. 

இதை மேற்கோள் காட்டி, மாதம் ரூ. 200 மதிப்பிலான அழைப்புகள் ஊழியர்களுக்கு வழங்குவதற்கு மாற்றாக, இந்த (ரூ.429) திட்டத்தை ஊழியர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என நமது சங்கம் தான் முதலில் கோரிக்கை வைத்தது. அதோடு, 35வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் அஜெண்டாவும் கொடுத்தது. 

மனித வள இயக்குனர் நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, கூட்டத்திலேயே கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். ஆனாலும், வழக்கம் போல், சில நிர்வாகக் பிரச்சனைகளை காரணம் காட்டி, கோரிக்கையை மறுத்து, நமது சங்கத்திற்கு கடிதம் கொடுத்தது கார்ப்பரேட் நிர்வாகம். 

நமது பொது செயலர் இதை கண்டித்து, நிர்வாகத்திற்கு மீண்டும் கடிதம் எழுதினார். தொடர்ந்து இது சம்மந்தமாக மனித வள இயக்குனருடன் விவாதித்து வந்தார். நமது கோரிக்கையை இனியும் மறுக்க முடியாது என்பதால், அதை ஏற்று, திட்டத்தை ஊழியர்களுக்காக பிரத்யோ கமாக மாற்றி, இன்று, (05.06.2018) நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இனி ஊழியர்கள்,  தங்கள் சேவை சிம்மிலிருந்து அனைத்து நிறுவனங்களுக்கும் அளவில்லா அழைப்புகள் மேற்கொள்ளலாம். தினமும், 1GB டேட்டா, 100 SMS இலவசம். இலவச ரோமிங். (டில்லி மும்பை உள்ளிட்ட MTNL பகுதிகளிலும் இயங்கும்)

புதிய திட்டம், உத்தரவு வெளியிடப்பட்ட, இன்று, (05.06.2018) முதல் அமுலுக்கு வருகிறது. 

ஊழியர்களின் எண்ண ஓட்டங்களை படம் பிடித்து, தொடர்ந்து போராடி, நல்ல ஒரு பலனை ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுத்த, BSNLEU மத்திய சங்கத்திற்கு, சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்