Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 24, 2018

முதல் நாள் உண்ணாவிரதம் - 24.07.2018 - மெய்யனுர், சேலம்


AUAB கூட்டமைப்பின், போராட்ட அறைகூவல்படி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 24.07.2018 அன்று முதல் நாள் உண்ணாவிரத போராட்டம், மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), S . மோகன்குமார் (SNEA), ஜான் நேசன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தை தோழர் S . தமிழ்மணி,  தமிழ் மாநில உதவி தலைவர், BSNLEU முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். சேலம் மாவட்ட DGM (HR/ADMN), திரு. பொன்னுசாமி, சேலம் மாவட்ட AGM (HR /ADMN) திரு. கந்தசாமியுடன் வந்து போராட்டத்தை வாழ்த்தி பேசினார். SNEA CEC உறுப்பினர் தோழர் M .R . தியாகராஜன், வாழ்த்துரை வழங்கினார். 

தோழர் R . மணிகண்டன், (AIBSNLEA), S . ஹரிஹரன்(BSNLEU), P . சந்திரசேகரன்(SNEA), D. பிரசாத் (AIBSNLEA) , P . தங்கராஜு (BSNLEU), R . ஸ்ரீனிவாசன்(SNEA), தோழியர் அபிராமசுந்தரி, மாநிலக்குழு உறுப்பினர் BSNLCCWC, தோழியர் K . M . புவனேஸ்வரி, கன்வீனர், BSNLCCWC, M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

பின்னர் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 250 தோழர்கள் (75 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம். தோழர் M . சண்முகம் (BSNLEU) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்