AUAB கூட்டமைப்பின், போராட்ட அறைகூவல்படி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 26.07.2018 அன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத போராட்டம், சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), P. இளங்குமரன் (SNEA), S . சேதுபதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை துவக்குவதுற்கு முன்பு, 24.07.2018 அன்று கர்நாடக மாநிலம், பீஜாப்பூர் AUAB போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் துறந்த தோழர் V. K . மகுளி, DGM அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்டத்தை தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர், BSNLEU முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். சேலம் மாவட்ட DGM (PLG), திரு. அண்ணாதுரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போராட்டத்தை வாழ்த்தி பேசினார். SNEA CEC உறுப்பினர் தோழர் M.R . தியாகராஜன், DGM(CM) வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் K . பாலசுப்ரமணியன்,(AIBSNLEA), S . ஹரிஹரன்(BSNLEU), R. ஸ்ரீநிவாசன் (SNEA), D. பிரசாத் (AIBSNLEA) , P . தங்கராஜு (BSNLEU), M . சண்முகம் (BSNLEU), M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU A. மதியழகன் (AIBDPA), P . ராமலிங்கம் (AIBSNLPWA) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பின்னர் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 300 தோழர்கள் (75 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டது நல்ல அம்சம். தோழர் S . ஹரிஹரன் (BSNLEU) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பொதுவாக தோழர்களே! மூன்று நாட்களும், சுமார் 700 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்ட பந்தலுக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தந்தது, கோரிக்கையின் நியாயத்தை உணர்த்தும் விதத்தில் இருந்தது. நிறுவன வருவாயை அதிகரிக்க, 4G தொழிநுட்பம் BSNL நிறுவனத்திற்கு, கட்டுப்பாடுகள் ஏதுமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பது பிரதானப்படுத்தப்பட்டது. மூன்று நாட்களும், மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் பந்தலுக்கே வந்து ஆதரவு வழங்கியது போற்றுதலுக்குரியது. இதுபோக ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சம். ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வெற்றி பெற உடல் உழைப்பு வழங்கியது பாராட்டுக்குரியது. மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் தோழர்களே திரட்டுவதில் எடுத்து கொண்ட முயற்சி நல்ல பலன் தந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். போராட்ட களத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்த மெய்யனுர், MAIN பகுதி தோழர்களுக்கும் நன்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்