26.06.2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, BSNL வருவாய் அதிகரிப்பு சம்மந்தமாக விவாதிப்பதற்காக, ஒரு சிறப்பு அமர்வு 04.07.2018 அன்று டில்லியில் நடைபெற்றது.
AUAB கூட்டமைப்பின் அங்கத்தினர்களான BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, BSNLMS, ATM உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள்/பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு, தோழர் பிரகலாத ராய், பொது செயலர், AIBSNLEA தலைமை தாங்கினார்.
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின், கவலையளிக்கக்கூடிய விதத்தில் ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி சம்மந்தமாக கூட்டம், ஆழமாக பரிசீலித்தது. ஊழியர்கள்/அதிகாரிகள் மூன்றாவது ஊதிய மாற்றம் எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில், வருவாய் இழப்பு என்பது ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளதை கூட்டம் விவாதித்தது. எனவே, வருவாயை அதிகப்படுத்த உடனடி நடவடிக்கைகளாக கீழ்கண்ட இயக்கத்தில் ஈடுபடுவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
01. BSNL பொருட்களின் விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் வருவாயை பெருக்கிட " உங்கள் இல்லம் தேடி BSNL" (BSNL AT YOUR DOORSTEP) என்ற புதிய இயக்கத்தை ஊழியர்கள்/அதிகாரிகள் கூட்டாக நடத்துவது. இந்த நிதி ஆண்டு இறுதி வரை இந்த இயக்கத்தை கடைபிடித்து, வருவாயை அதிகரிக்க செய்வது.
02. FTTH, பிராட்பேண்ட், LEASED LINE, மொபைல் இணைப்புகளை தீவிரமாக சந்தைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் சிறப்பு கமிட்டிகளை உருவாக்குவது.
03. மார்க்கெட்டிங் பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் போல், மற்ற பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களும், வாரம் ஒரு நாள் மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தோழர்களே! 26.06.2018 கூட்டத்தில் எடுக்கப்பட்ட போராட்ட இயக்கங்களையும், 04.07.2018 கூட்டத்தில் எடுக்கப்பட்ட BSNL வருவாய் அதிகரிப்பு சம்மந்தமான இந்த புதிய முயற்சிகளையும், நமது மாவட்டத்தில் கூட்டாக அமுல்படுத்துவோம்.
வருவாயை அதிகரிக்க செய்து, BSNL நிறுவனத்தை காப்போம்!.
ஊழியர்கள் கோரிக்கையை வெற்றி பெற செய்வோம்!!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்