01-07-2018 முதல் IDA 0.8% சதவீதம் உயர்ந்துள்ளது. இத்துடன் மொத்த IDA 128 சதவீதமாகும். (127.2% + 0.8%)
===================================================================
DPE வழிகாட்டுதலின்படி, BSNL ஊழியர்களுக்கு, 3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தையை துவக்குவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்களும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக, 5 உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். முதன்மை சங்கமான, BSNLEU சார்பாக 3 உறுப்பினர்களும், இரண்டாவது சங்கமான NFTE சார்பாக 2 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். ஊழியர்கள் தரப்பில் வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே என்பது ஏற்புடையதல்ல என நமது மத்திய சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை JCMல் உள்ளது போல் BSNLEUக்கு 9 உறுப்பினர், NFTEக்கு 5 உறுப்பினர் என உயர்த்தப்பட வேண்டுமென நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
====================================================================
நேரடி நியமன ஊழியர்கள் மற்றும் கருணை அடிப்படையில் பணிக்கு வந்த தோழர்களுக்கு சேவைப்பதிவேடு துவக்குவதில் பல இடங்களில் பல முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதால், கார்ப்பரேட் அலுவலகம் அவற்றை முறைப்படுத்தி கடிதம் எழுதி உள்ளது. நேரடி நியமன ஊழியர்களை தற்காலிக பணிநியமனம் (PROVISIONAL APPOINTMENT) செய்யும் போதே அவர்களிடம் காவல்துறை பரிசோதிப்பு அறிக்கை(PVR), கல்வி தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை வற்புறுத்தாமல் சேவை பதிவேட்டை துவக்க வேண்டும். அப்பொழுதே அவருக்கு மருத்துவ அட்டை வழங்க வேண்டும். அதன் பின்னர் விளக்கங்கள் வரும் சமயத்தில் தேவையான மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளை சேவைப் பதிவேட்டில் இணைத்துக் கொள்ளலாம். PVR, ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பணி நியமனத்திற்கு முன் விளக்கங்களை பெறும் நடவடிக்கைகளை எந்த ஒரு காலதாமதமுமின்றி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====================================================================
குழந்தைகள் நல விடுப்பு தொடர்பான பல விளக்கங்கள் மற்றும் உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனை BSNLல் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த பிரச்சனையை BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து கையில் எடுத்து நிர்வாகத்துடன் விவாதித்து வந்தது. இறுதியாக 19.06.2018 அன்று GM(Estt) திரு சௌரப் தியாகி அவர்களிடம் நமதுபொது செயலாளர் தோழர் P.அபிமன்யு விவாதித்த போது, இது தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளும் தன்னிச்சையாக BSNLக்கு பொருந்தும்படியான உத்தரவை வெளியிடுவதாக உறுதி அளித்திருந்தார். அவர் உறுதி அளித்த படி அதற்கான கடிதத்தை கார்ப்பரேட் அலுவலகம் 26.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.====================================================================
2017-18ம் ஆண்டிற்கான FORM-16 தமிழ்நாடு BSNL இன்ட்ராநெட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ட்ராநெட் தளத்திற்கு 10.40.21.134 என்ற IP முகவரிக்கு சென்று, FINANCE - PLANNING & TAXATION - FORM-16 என்கிற இணைப்பிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அபராதம் ஏதுமின்று வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் 31.07.2018.
====================================================================
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை சிம்கார்ட்களில் 01.07.2018 முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் அளவில்லா இலவச அழைப்புகள், தினம் 100 SMS மற்றும் தினம் 1GB DATA, உள்ளிட்ட வசதிகள் அனுமதிக்க பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்