இந்தியாவில் முதன்முறையாக நமது BSNL நிறுவனம், "இணையதள தொலைபேசி சேவையை" துவக்கியுள்ளது. இதுவரை இணையதள வசதி உள்ளவர்கள் மட்டும் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வசதி இருந்தது. இணையதளத்தில் இருந்து அலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசிக்கு பேசும் VOIP என்னும் வசதியை முதன்முதலில் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. சிறகுகள் (WINGS) சேவை, 01/08/2018 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.1099/- மட்டுமே. VIDEO அழைப்பு வசதி, அலைபேசி COVERAGE இல்லாத இடங்களிலும் பேசும் வசதி, எல்லா நிறுவனங்களையும் அழைக்கும் வசதி, மாதாந்திர வாடகை இல்லை, அமைப்புக்கட்டணம் இல்லை, ஓராண்டுக்கு இலவச சேவை என பல சிறப்பம்சங்கள் நமது WINGS திட்டத்தில் உள்ளது.
=====================================================================================================
மூன்றாவது ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் உறுப்பினர்களை ஏற்கனவே நமது மத்திய சங்கம் இறுதி படுத்தி, பட்டியலை நிர்வாகத்திற்கு கொடுத்துவிட்டது. பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என நாம் கோரி வந்தோம். தற்போது, NON EXECUTIVE ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து விவாதிக்க "ஆய்வு கூட்டம்" வரும் 20.7.2018 அன்று டில்லியில் நடைபெறும் என BSNL தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அலுவலர் குழு உறுப்பினர்களுக்கும், BSNLEU, NFTEBSNL பொது செயலர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
======================================================================================================
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக JE பதவி உயர்வுக்கான 50% இலாக்கா போட்டி தேர்வு நடத்திட, கார்ப்பரேட் நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
=======================================================================================================
BSNL ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தின் படி வெளிப்புறச் சிகிச்சைக்கான ( Outdoor Treatment ) வருடாந்திட ஈட்டுக்கான உச்சவரம்பை 12 நாட்கள் சம்பளமாக குறைக்க நிர்வாகம் முற்பட்டது. இதனை நமது
ச ங்கம் கடுமையாக எதிர்த்தது. பல முறை நமது மத்திய சங்கம் இது தொடர்பாக நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியது. வெளிப்புறச் சிகிச்சைக்கான
( Outdoor Treatment ) வருடாந்திர ஈட்டுக்கான உச்சவரம்பை தற்போது 23 நாட்கள் சம்பளம் + 78.2% பஞ்சப்படி என மீண்டும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. உத்தரவு 01.04.2018 முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவு ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்.
========================================================================================================
இந்திய அரசாங்கம் "இணைய நடுநிலைமை" (Net - Neutrality) கோட்பாட்டிற்கு 11.07.2018 அன்று ஒப்புதல் கொடுத்தது. இணைய நடுநிலை கொள்கை கோட்பாட்டின் கீழ், ஒவ்வொரு இணைய பயனாளருக்கும் "அதே விலை மற்றும் வேகத்தில்" அனைத்து சட்டப்பூர்வ ஆன்லைன் உள்ளடக்கங்களும் சமமான
விலையில் கிடைக்கும். முன்னர், சில தனியார் நிறுவனங்கள், கூடுதல் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் அதி வேகத்தில் இணையம் கிடைக்க திட்டம் தீட்டினார்கள். பணம் குறைவாக கட்டுபவர்களுக்கு, குறைந்த வேகத்தில் கிடைக்க கூடிய ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தார்கள். இனி அந்த பாகுபாடு இல்லை.
==========================================================================================================
இந்தியா, உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2017 ஆம் ஆண்டில் 2.59 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி நாம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2017 ல் 2.58 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தான். அடுத்து, 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ள பிரிட்டனை இந்தியா விரைவில் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. அதே நேரத்தில், உலகின் அதிகமான ஏழைகளை கொண்டுள்ள நாடும் நாம் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்