20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச ஜூனியர் தடகளப் போட்டி (ஐஏஏஎப்) பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் நடைபெற்று வருகிறது. வியாழனன்று நடைபெற்ற 400 மீட்டர் இறுதிச்சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ஹிமா தாஸ், பந்தய தூரத்தை 51.46 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்துடன் புதிய வரலாறு படைத்தார்.ஐஏஏஎப் ஜூனியர் தடகள சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை 18 வயதாகும் ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.
சர்வதேச ஜூனியர் தடகளத்தின் பெண்கள் பிரிவில் சீமா புனியாவும் (2002),நவ்ஜீத் கவுர் (2014) மட்டுமே இந்தியா சார்பில் வெண்கலப்பதக்கங்களை பெற்றிருந்தனர்.தற்போது உலக தடகள சாம்பியன் போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்தாலும்,ஹிமா தாஸால் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் தங்கப் பதக்கம் அல்ல.இதற்கு முன் ஆண்கள் பிரிவில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில்) தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.