ஒன்றுபட்ட, தொடர்ச்சியான, திடமான போராட்டங்களுக்கு பின், 20.07.2018 அன்று ஊதிய மாற்ற குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நடைபெற்றது. குழுவின் தலைவரான, திரு. H .C .பந்த், CGM(LEGAL), தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிர்வாக தரப்பில் திருவாளர்கள் சௌரப் தியாகி, Sr. GM(Estt), ஸ்மிதி சௌத்ரி, GM(EF), A .M .குப்தா GM(SR), A.K. சின்ஹா, DGM(SR), ஆகியோர் பங்கேற்றனர்.
ஊழியர் தரப்பில், BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் P .அபிமன்யூ, GS, பல்பீர் சிங், தலைவர், ஸ்வபன் சக்ரவர்த்தி, Dy.GS, அசோகா பாபு, VP, அனிமேஷ் மித்ரா, VP ஆகியோரும், NFTEBSNL சார்பாக தோழர்கள் சந்தேஸ்வர் சிங், GS , இஸ்லாம் அஹமத், தலைவர், சேஷாத்ரி, Dy.GS ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தரப்பில் ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதல்கள் விவரிக்கப்பட்டன. ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு DPE இலாக்கவிடம் உரிய விளக்கம் பெற்று தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஊதியக்குழு சம்பந்தமான பேச்சு வார்த்தை, 31.08.2018 க்குள் முடிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.அடுத்த கூட்டம் 09/08/2018 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் புதிய ஊதிய விகிதங்களை கட்டமைப்பது பற்றி விவாதிக்கப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்