BSNL ஊழியர்களின் மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான, இருதரப்புக்குழுவின் மூன்றாவது கூட்டம், 27.08.2018,
அன்று டெல்லியில் நடைபெற்றது. நிர்வாக தரப்பிலும், ஊழியர் தரப்பிலும், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
09.08.2018 அன்று நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், ஊழியர் தரப்பிலிருந்து ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக,
விரிவான முன்மொழிவு கொடுக்கப்பட்டிருந்தது. நிர்வாகம் அவர்களது முன்மொழிவை 27.08.2018 நேற்றைய கூட்டத்தில் கொடுத்தனர்.
பழைய ஊதிய விகிதத்தை, 2.4 ஆல் பெருக்கினால் வரும் தொகையை புதிய ஊதிய விகித துவக்கமாக நிர்வாகம் முன்மொழிந்தது. அதாவது, GROUP D ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தை ரூ.7760/=லிருந்து ரூ.18600/= என்று உயர்த்த நிர்வாகம் இசைவு தெரிவித்திருந்தது.
NE-I எனப்படும் GROUP D ஊழியர்களின் தற்போதைய சம்பள விகிதமான ரூ.7760 -13200 என்பது ரூ.19590 – 69800 என உயர்த்தப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்பு முன்மொழிவு. எனவே, நிர்வாகத்தின் முன்மொழிவு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சுட்டிக்காட்டிய ஊழியர் தரப்பு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம், 2.44 பெருக்கினால் வரும் ரூ. 18,934/- என்பது ரூ.19000/= என்றாவது, உயர்த்தப்பட வேண்டும் என உறுதியாக வலியுறுத்தினோம். நிர்வாகம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.
தேக்க நிலையை போக்க, குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதைப் போலவே, அதிகபட்ச ஊதியத்தை (MAXIMUM OF PAY SCALE) உயர்த்தவும், நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றது. சம்பள விகித இடைவேளை 43 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஓய்வூதிய பங்களிப்பில் கூடுதல் சுமை ஏற்படும் என நிர்வாகம் கருதுகிறது. பேச்சு வார்த்தை வேகமாக செல்லாததை ஊழியர் தரப்பு விமர்சித்தது. பேச்சு வார்த்தையை விரைவு படுத்த கோரியது.
அடுத்த கூட்டம் 10.09.2018 அன்று நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்