Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 21, 2018

ராசிபுரம் கிளையின் 9வது மாநாடு


18.08.2018 அன்று ராசிபுரம் கிளையின் 9வது மாநாடு, ராசிபுரம்  தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் S . மாதேஸ்வரன், தலைமை தாங்கினார். முன்னாள் பாரத பிரதமர் மறைவையொட்டி, கொடி ஏற்ற நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது. 

தோழர் P . M . ராஜேந்திரன், மாவட்ட உதவி பொருளர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் R . கோவிந்தராஜூ   கிளை செயலர், அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். 

தோழர்கள் S. ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர், தோழர் S . ராமசாமி, மாவட்ட உதவி செயலர், தோழர் P . செல்வம், மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M . பன்னீர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலர்,  தோழர் M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, திருச்செங்கோடு நகர கிளை செயலர் தோழர் M . ராஜலிங்கம் GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தோழர் E. கோபால், மாவட்ட செயலர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர்கள் S . மாதேஸ்வரன், P .M .ராஜேந்திரன், M . கந்தசாமி, ஆகியோர் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.  

சென்ற மாநாட்டிற்கு பின், ராசிபுரம் கிளையில் பணி நிறைவு செய்த தோழர்கள் கௌ ரவிக்கப்பட்டனர். தீர்மானங்கள் நிறைவேற்றிய பின், தோழர் K . தங்கவேல், கிளை உதவி பொருளர் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.  மூத்த தோழர்கள் N . செல்வராஜ், கருப்பண்ணன், V. கோபால் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நேர்த்தியான ஏற்பாடுகள்  செய்த கிளை சங்கத்தை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்