BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் செய்ய அதிகாரிகள் தரப்பில் ஒரு குழுவும், ஊழியர் தரப்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சங்கமான BSNLEU சார்பாக 5 தோழர்களும், NFTEBSNL சார்பாக 3தோழர்களும் இந்த குழுவில் உள்ளனர். ஊழியர் தரப்பு சார்பான குழுவின் கூட்டம், 03.08.2018 அன்று, டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரம்:
BSNLEU: தோழர் பல்பீர் சிங், அகில இந்திய தலைவர், தோழர் P . அபிமன்யூ, பொது செயலர், தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி, துணை பொது செயலர், தோழர் அசோகா பாபு மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா உதவி தலைவர்கள்.
NFTEBSNL: தோழர் இஸ்லாம் அகமது, அகில இந்திய தலைவர், தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர், தோழர் K .S .சேஷாத்திரி. துணை பொது செயலர்.
புதிய சம்பள விகிதம் சம்மந்தமாக ஊழியர் குழு, விரிவான ஆழமான விவாதம் மேற்கொண்டனர். ஊதிய தேக்க நிலை ஏற்படா வண்ணம் புதிய ஊதிய விகிதங்கள் அமைய, முன்மொழிவுகள் நிர்வாகத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
ஒன்றுபட்ட முறையில் ஊதிய மாற்றம் சம்மந்தமான முன்மொழிவுகளை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. நிர்வாகத்துடனான அடுத்த கூட்டம், 09.08.2018 அன்று நடைபெற உள்ளதால், புதிய சம்பள விகிதங்கள் சம்மந்தமாக 06.08.2018க்குள் நமது முன்மொழிவுகளை நிர்வாகத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்