புதிய ஊதிய விகித முன்மொழிவை BSNL ஊழியர் சங்கமும், NFTEயும் இணைந்து நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது.
ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க ஒன்று பட்டு செயல்படுவது என BSNL ஊழியர் சங்கமும் NFTEயும் ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.
02.08.2018 அன்று ஊதிய மாற்றக்குழுவில் உள்ள BSNLEU மற்றும் NFTE சங்க உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் கூடிய போது நீண்ட விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக புதிய ஊதிய விகிதங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதில் ஒரு ஒன்றுபட்ட முடிவு எட்டப்பட்டது. மேலும் 09.08.2018, இன்று ஊதிய மாற்றக்குழு கூடுவதற்கு முன்பாகவே நிர்வாகத்திற்கு இது தொடர்பான ஒரு குறிப்பை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று, 08.08.2018 அன்று ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களுக்கு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஊதிய மாற்ற குழு கூட்டம்
ஏற்கனவே அறிவித்த படி, 09.08.2018, இன்று ஊதிய மாற்றக்குழு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகம் எந்த வித தயாரிப்பும் இல்லாமல், கூட்டத்திற்கு வந்தது. சங்கங்கள் தங்கள் முன்மொழிவு சம்மந்தமான விவரங்களை விளக்கினர். நிர்வாகம், ஊதிய மாற்றம் சம்மந்தமாக, நிர்வாக தரப்பின் சார்பாக உப குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு அது சம்மந்தமான ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் மட்டும் தெரிவித்துள்ளனர். நடவடிக்கையை துரித படுத்த சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். அடுத்த கூட்டம், 27.08.2018 அன்று நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
முன்மொழிவு காண இங்கே சொடுக்கவும்