29.07.2018 அன்று திருச்செங்கோட்டில், TNTCWU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட அளவில் தீர்வு காணப்பட வேண்டிய ஒப்பந்த ஊழியர்களின் பல பிரச்சனைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதன் அடிப்படையில், 11 அம்ச கோரிக்கைகள் வடித்து எடுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தையும், ஒப்பந்ததாரரையும், நிர்பந்திக்க, இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
BSNLEU சங்கத்துடன் இணைந்து, 09.08.2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 14.08.2018 அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது முடிவு. 07.08.2018 அன்று தமிழக முன்னாள் முதல்வர் மறைவு காரணமாக போராட்டம், 13.08.2018ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, 13.08.2018 அன்று அனைத்து கிளைகளிலும் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். மேலும், 14.08.2018, செவ்வாய் அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால், BSNLEU
M . செல்வம், TNTCWU
சேலம் மாவட்ட செயலர்கள்
மாவட்ட சங்கங்கள் நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்