Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 20, 2018

GM அலுவலக கிளையின் 9வது மாநாடு

17.08.2018 அன்று, GM அலுவலக கிளையின் 9வது மாநாடு, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. GM அலுவலக கிளை தலைவர் தோழர், P. சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் பாரத பிரதமர் மறைவு காரணமாக, கொடி ஏற்ற நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது. 

தோழர் R . ஸ்ரீனிவாசன் , மாவட்ட அமைப்பு செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் N . பாலகுமார் கிளை செயலர், அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர்கள் P . தங்கராஜு, மாவட்ட பொருளர், தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர்கள் P . சண்முகம், N . பாலகுமார், R . முருகேசன்  ஆகியோர் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.  

தீர்மானங்கள் நிறைவேற்றிய பின், தோழர் R . முருகேசன் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். BSNLEU மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் S . சேகர், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்