TNTCWU சங்கத்தின், சேலம் மாவட்ட செயற்குழு, திருச்செங்கோட்டில், 29.07.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் K . ராஜன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக, TNTCWU சங்க கொடியை, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவர், BSNLEU, அவர்களும், BSNLEU சங்க கொடியை, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU அவர்களும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.
தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர், TNTCWU அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் வெங்கடேசன், கிளை செயலர், TNTCWU, திருச்செங்கோடு, மற்றும் தோழர் M . ராஜலிங்கம், கிளை செயலர், BSNLEU திருச்செங்கோடு நகரம் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார்கள்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர், BSNLEU துவக்கவுரை வழங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி பேசினார்.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . விஜயன், S . ஹரிஹரன், P. தங்கராஜ், M . பன்னீர்செல்வம், P . செல்வம், P . M . ராஜேந்திரன், G. நாராயணன், R . ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். TNTCWU கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் விளக்கவுரை அளித்தார்.
6வது மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழுவை முடித்து வைக்கும் வகையில், மாநாட்டு வரவேற்பு குழு பொருளர் தோழர் P . தங்கராஜு, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. TNTCWU மாவட்ட பொருளர் தோழர் C . பாஸ்கர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். BSNLEU கிளை செயலர்கள் தோழர்கள் R . கோவிந்தராஜூ(ராசிபுரம்), N . பாலகுமார் (GM அலுவலகம்), P . சண்முகம் (எடப்பாடி), R . ரமேஷ் (வேலூர்) ஆகியோரும் நிகழ்வில் பங்குபெற்றனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்