08.09.2018 அன்று நமது சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், சேலம் செவ்வாய்பேட்டை தொலைபேசி நிலைய வளாக, 7வது மாடி, கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே சங்க கொடியை தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர் ஏற்றி வைத்தார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை வழங்கினார். தோழர் D. சுப்பிரமணி, கிளை செயலர், STR அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் E . கோபால், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, சிறப்புரை வழங்கினார்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விவாதத்தில், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவாதத்திற்கு பதில் அளித்து தோழர் E . கோபால், மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.
15.10.2018க்குள் மாநாடுகள் நடத்தாத கிளைகள் தங்கள் கிளை மாநாடுகளை நடத்தி முடிக்கவேண்டும், 10.09.2018 அன்று LEO அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், தள மட்ட போராட்டம், உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பணி ஓய்வு, அதிகாரி பதவி உயர்வு போன்ற காரணங்களால் காலியாக இருந்த மூன்று மாவட்ட சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு தோழர் K . ராஜன், R . கோவிந்தராஜூ, R . முருகேசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தோழர் R . ஸ்ரீனிவாசன், மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்