ஊதிய மாற்றக் குழுவின் 5வது கூட்டம், இன்று (14.09.2018) கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். சென்ற கூட்டத்தில், சம்பள விகிதங்கள் சம்மந்தமாக நிர்வாகம் கொடுத்த முன்மொழிவுகள் ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகத்தின் முன்மொழிவுகளை, ஆராய்ந்ததாகவும், பூர்வாங்கமாக அது ஏற்புடையதாகவும், ஊழியர் தரப்பு கருத்து தெரிவித்தது. இருப்பினும், நாடு முழுவதும் கருத்து கேட்டுள்ளதாகவும், நிர்வாகத்தின் முன்மொழிவுகளால் எதாவது ஊழியருக்கு பாதகம் ஏற்படுமா என ஆராய்ந்து வருவதாகவும், எனவே அதன் மீது ஒரு முடிவு எடுக்க, ஒரு வார கால அவகாசம் வேண்டும் என ஊழியர் தரப்பு கோரியது.
நிர்வாகம் ஊழியர் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அடுத்த கூட்டம், 28.09.2018 அன்று நடத்த முடிவு எடுக்கப்பட்டது. பிறகு, ஊழியர் தரப்பு, தனியே கூட்டம் நடத்தியது. ஊதிய மாற்ற மற்ற கோரிக்கைகள் சம்மந்தமாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டது. மீண்டும், 25.09.2018 அன்று ஊழியர் தரப்பு கூட்டம் நடக்க உள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்