ஊதிய மாற்றக் குழுவின் 6வது கூட்டம், இன்று (28.09.2018) கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சம்பள விகிதங்கள் இறுதிப்படுத்த, பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஊழியர் தரப்பு தலைவர்கள், NE 4 மற்றும் NE 5 புதிய சம்பள முன்மொழிவுகளில், தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினர். தேக்க நிலை வராமல் இருக்க, கூடுதலாக ஒரு இன்க்ரிமெண்ட் கொடுத்து சம்பள விகிதத்தை மாற்றினால், பிரச்சனை தீரும் என்று ஆலோசனை வழங்கினர். ஊழியர் தரப்பு ஆலோசனையை பரிசீலிப்பதாக நிர்வாக தரப்பு தெரிவித்தது.
மேலும், ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக ஒப்பந்தம் உடனடியாக எட்டப்பட்டு, DoT ஒப்புதலுக்கு அனுப்ப கோரிக்கை விடப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிர்வாகம், ஊதிய மாற்றம் மூலம் ஏற்படக்கூடிய செலவுகள், மற்ற படிகள் மாற்றம் செய்வதால் ஏற்படக்கூடிய செலவுகள் என அனைத்தையும் கணக்கிட்டு DoTக்கு அனுப்ப வேண்டும் என்ற வழிமுறையை விளக்கியது.
எனவே, 09.10.2018 அன்று நடைபெறவுள்ள, அடுத்த கூட்டத்தில், PERKS & ALLOWANCES சம்மந்தமாக விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்