ஊதிய மாற்றக் குழுவில் உள்ள ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் (BSNLEU - NFTE) கூட்டம், 11.09.2018 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், 10.09.2018 அன்று நிர்வாக தரப்பில் தரப்பட்ட ஊதிய விகிதங்கள் பரிசீலிக்கப்பட்டது. புதிய ஊதிய விகிதம் அமலாக்கப்பட்ட பின் எந்த ஒரு ஊழியருக்கும் ஊதிய தேக்கம் ஏற்படக்கூடாது என்பதில் ஊழியர் தரப்பு உறுதியாக உள்ளது.
ஊழியர் தரப்பினருக்கு வந்த இது தொடர்பான அனைத்து தனி நபர் பிரச்சனைகளும் இன்றையக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. ஊதிய மாற்றக் குழுவின் அடுத்தக் கூட்டம் 14.09.2018 அன்று நடைபெற உள்ளது.
நிர்வாக தரப்பு தற்போது கொடுத்துள்ள புதிய ஊதிய விகிதங்களின் படி தேக்க நிலை அடையக்கூடிய வாய்ப்பு உள்ள ஊழியர்களின் விவரங்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்