இந்தியாவில் உள்ள மத்திய தொழிற் சங்கங்களின் தேசிய கருத்தரங்கம், டில்லியில் இன்று (28.09.2018) நடைபெற்றது. INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, மற்றும் UTUC சங்கங்கள் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. நமது, BSNLEU சங்கமும் கூட்டத்தில் கலந்து கொண்டது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு, நவீன தாராளமய கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பரிசீலிக்கப்பட்டது. 2017 நவம்பரில் டில்லியில் "மஹாபாதவ்" என்று சொல்லப்பட்ட "மகா முற்றுகை போராட்டத்தை" வெற்றிகரமாக தொழிலாளர்கள் நடத்தியும், மத்திய அரசிடம் லேசான ஒரு அசைவு கூட ஏற்பட வில்லை.
எனவே, மத்திய அரசின், தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, 2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் இரண்டு நாள்(48 மணி நேரம்) வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்