BSNL கொடுத்த முன்மொழிவின் அடிப்படையில் BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 11, 2018 தேதியில் வெளிவந்த எகானாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில், BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கும் பணி துரித கதியில் நடந்து வருவதாகவும், அதற்கான முழுமையான பணிகள் 80 நாட்களுக்குள் முடிவடையும் எனவும் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளதாக எகானாமிக் டைம்ஸ் டெலிகாம் தெரிவிக்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,மாவட்ட செயலர்