Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 20, 2018

BSNL CMD - முக்கிய சங்க பொது செயலர்கள் - சந்திப்பு

Image result for meeting

இன்று, 20.09.2018, BSNL CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா, BSNLல் உள்ள முக்கிய சங்கங்களின் பொது செயலர்களை சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தார். 

BSNLEU பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, SNEA பொது செயலர் தோழர் K . செபாஸ்டின், AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலாத ராய் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். விவரம் சுருக்கமாக: 

01. ஊழியர்களிடம் பிடிக்கப்போகும் கேரள வெள்ள நிவாரண நிதியை, CMD அவர்கள் கேரள முதல்வரிடம் நேரிடையாக சென்று வழங்க வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மூலம், BSNLக்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்ற தலைவர்களின் வாதத்தை CMD ஏற்று கொண்டார்.

02. 24.09.2018 அன்று "BSNL உங்கள் இல்லம் தேடி" (BSNL AT YOUR DOOR STEPS) இயக்கம், BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில், AUAB தலைவர்கள் முன்னிலையில், துவங்கப்படும்.

03. BSNL 4G சேவை துவங்க, துரிதமாக நடவடிக்கை எடுக்கபடும் என CMD உறுதி அளித்தார்.

04. துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியின் பாதக அம்சங்களை CMD ஏற்று கொண்டு, செயல்படுத்தப்படாமல் இருக்க ஆவண செய்வதாக சூசகமாக தெரிவித்தார்.

05. BSNL டவர்கள் OUTSOURCING விடுவது சம்மந்தமாக தலைவர்கள் தங்கள் கவலையை CMDயுடன் பகிர்ந்து கொண்டனர்.  

06. நம்முடைய வாடிக்கையாளர் சேவை மையத்தில்(CSC), ஆதார் சேவை மையம் இயங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்