பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், 2018 ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளங்களை இது நாள் வரையில் வழங்காததை கண்டித்தும், மாநிலம் முழுவதும், BSNLEU - TNTCWU, சங்கங்கள் சார்பாக, இன்று, 10.09.2018 LEO (மத்திய தொழிலாளர் நல செயலாக்க அதிகாரி) அவர்களை சந்தித்து மகஜர் வழங்குமாறும், ஆர்ப்பாட்டம் நடத்துமாறும் அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நமது சேலம் மாவட்ட BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக, இன்று 10.09.2018 காலை LEO அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்