Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 12, 2018

தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் - 9.10.2018

Meeting puzzle peices

தமிழ் மாநில கவுன்சில் கூட்டம், 09.10.2018 அன்று தலைமை பொது மேலாளர், திரு ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் GM HR திரு மோகன் அவர்கள் வரவேற்று பேசினார்.

கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் ஊழியர் தரப்பு தலைவர் தோழர் நடராஜன் துவக்கவுரை வழங்கினார். பின்னர், ஊழியர் தரப்பு செயலர் தோழர் S . செல்லப்பா அவர்கள் தனது துவக்கவுரையில், தல மட்டங்களில் கவுன்சில்கள் முறையாக கூட்டப்படாததையும், சேலம் மாவட்டத்தில் இரு முறை ஆய்படு பொருள் கொடுத்தும், நான்கு ஆண்டாக கவுன்சில் கூட்டம் நடத்தாதையும் கடுமையாக சாடினார். கருணை அடிப்படை பணிநியமனத்தில் நிலவுகிற காலதாமதம், மருத்துவபில் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை பட்டியலிட்டார். 

தலைமை பொது மேலாளர் தனது உரையில் பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் உள்ள காலதாமதம் தீர்க்கப்படும். ஊழியர்கள் ,நிர்வாக தரப்பு உறவு வலுப்பட நம்பிக்கை உருவாக்குவது அவசியம் என்றும் பிரச்சனை விரைந்து தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார். 

அதன்பின், ஆய்படு பொருள் மீது நடைபெற்ற விவாதங்களின் தொகுப்பு சுருக்கமாக: 

1.BSNL டவர்களில் 3G   விரிவாக்கம் செய்து வருவாய் ஈட்டிட வேண்டுமென கோரினோம் . தமிழ் நாட்டில் 5873  டவர்கள் உள்ளன .இதில் 2973 3G  டவர்கள், மேலும் 1428  3G  ஆக மாற்றப்பட உள்ளது . 1652 4G டவர்கள் கட்டுமானத்தில் உள்ளன. 

2. நமது அலுவலகம் மற்றும் குடியிருப்புக்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டிட கோரப்பட்டது .சிவில் பகுதி நிர்வாகம் 5மாவட்டங்களில் ( கோவை ,குன்னுர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ஆகிய SSA  க்களில்) காலி இடங்களை கண்டறிந்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள குடியிருப்புகளை ஓய்வூதியர் /ஓய்வூதியர்கள் குடும்பம்  மற்றும் நிரந்தர ஊழியர்களிடம் செக்யூரிட்டி பெற்றுக்கொண்டு CONTRACT  ஊழியர்களுக்கு வழங்கலாம் என வலியுறுத்தப்பட்டது.

3. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய படிவம் 16 , 26AS, PART A  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4. PROJECT VIJAY, UDAAN  பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினோம் . மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெற்று ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

5. தமிழ்நாடு முழுவதும் IQ பராமரிப்பு போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டினோம். பராமரிக்கவும், தங்குவதற்கு ஏற்றதாக செய்திடவும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திடவும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

6. CSC பகுதிக்கு போதுமான ஊழியர்கள் நியமனம் செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளைவிட CSC க்கு முன்னுரிமை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது .

7. பணியில் உள்ள 2 TOA தோழர்களுக்கு CONFIRMATION வழங்கப்பட்டுள்ளது. 25.11.2018 அன்று SR.TOA பதவி உயர்வு தேர்வு நடத்தப்படும். 

8. வங்கி கடனுக்கு இன்சூரன்ஸ் அவசியம் என்பதை வலியுறுத்தி கூறினோம்.மாநில நிர்வாகம் கார்ப்பரேட்  அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

09. மின்சார செலவினங்களை குறைக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. டவர்களை தனியாருடன் பகிரும்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினோம் . நிர்வாகம் மின் கட்டணத்தை முழுமையாக வசூலிப்பதாக தெரிவித்தது.

10. 20 தொலைப்பேசிக்கு குறைவாக உள்ள 84 தொலைப்பேசி நிலையங்களில் 19 ஐ மூடிவிடவும் அதனை அருகாமையில் உள்ள exchange  உடன் இணைத்திடவும் மற்றவற்றில் வருவாயை பரிசீலித்து முடிவு எடுக்கவும் , ஊழியர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு சிறிய exchanges இணைத்திடவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

11. மருத்துவ பில்கள் தேக்கம் மற்றும் பில்களின் மீது விளக்கம் கேட்டு திரும்ப அனுப்புவது என ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்வுக்கு வழி கோரினோம். மருத்துவ கமிட்டி கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட முடிவு செய்யப்பட்டது. 

12. கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் வெளி வழக்கு காரணமாக ஓய்வுக்கால சலுகைகளை நிறுத்தக்கூடாது என கோரப்பட்டது. மாவட்டங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் தீர்வுக்கு வழிகாட்டப்படும்.

13.  லைன்மேன் ஊதியம் பெற்று பின்னர் TM ஆன தோழர்களுக்கு பணி ஓய்வு நேரத்தில் ஊதிய பிடித்தம் செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 403  தோழர்களின் ஊதிய பிடித்தம் திரும்ப பட்டுவாடா செய்திட CGM அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

14. பரிவு அடிப்படையில் வேலை நியமனம் 2016 -2017 ல் 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 -2018 க்கு 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 20 விண்ணப்பங்கள் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. 

15. ஒப்பந்த ஊழியருக்கு 27.03.2015 உயர் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்த வலியுறுத்தப்பட்டது. 2019 ஜனவரிக்குள் பிரச்சனை தீர்வு எட்ட, நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. 

16. பணியின் போது, விபத்தால் உயிரிழ ந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை விரைந்து முடிக்கப்படும். 

17. அலுவலகங்களில் படிப்படியாக வெஸ்டர்ன் டாய்லட் அமைக்கப்படும் .

18. மகளிருக்கு ஓய்வறை வழங்கிடவும் , மேம்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ..

19. தமிழகம் முழுவதும் 56 மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் PAYMENT BASISல் பயன்படுத்திட பரிசீலிக்கப்படும். 

20. ஒப்பந்த ஊழியர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான, UNIFORM TENDER அமலாக்க வேண்டும் என்கிற நமது கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், இது தொடர்பாக மீண்டும் விவாதிக்க ஏற்று கொண்டுள்ளது. 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்