Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 26, 2018

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - எடப்பாடி - 25.10.2018


நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு, எடப்பாடியில், 25.10.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக, சங்க கொடியை, எடப்பாடி தொலைபேசி நிலையத்தில் உள்ள சங்க கொடி கம்பத்தில், தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், தோழர் P . சண்முகம் எடப்பாடி கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார். 

TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

"BSNL AT YOUR DOOR STEPS", இயக்கத்தை வெற்றிகரமாக்குவது, சேலம் மாவட்ட BSNL நிதி ஆதாரத்தை அதிகரிக்க கூடுதலாக பாடு படுவது உள்ளிட்ட விஷயங்கள் சேவை கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.  

AUAB போராட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, அகில இந்திய மாநாடு, அமைப்பு நிலை, தள மட்ட பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் M . P . ஜெகநாதன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்