30.10.2018 - செவ்வாய்கிழமை - சேலம் MAIN தொலைபேசி நிலையம்
08/10/2018 அன்று டெல்லியில், அனைத்து சங்கக்கூட்டமைப்பான AUAB அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. 24.02.2018 மற்றும் 01.08.2018 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்தும், அவர் கொடுத்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை கூட்டம் ஆழமாக விவாதித்தது. எனவே நமது ஒன்றுபட்ட போராட்டங்களைத்
தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
29/10/2018 அன்று நாடு முழுவதும், நமது
கோரிக்கைகளை ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது
30/10/2018 அன்று மாவட்டத் தலைநகரங்கள், மாநிலத் தலைநகரங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்துவது.
14/11/2018 அன்று கோரிக்கை ஊர்வலம் மற்றும் கோரிக்கை மனு அளித்தல்.
30/11/2018க்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வேலை நிறுத்தம் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
கோரிக்கைகள்
*மூன்றாவது ஊதியமாற்றத்தை அமுல்படுத்து...
*ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து...
*4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்…
*ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…
*இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட பிரச்சனைகளை தீர்த்து வை...
இந்த போராட்ட அறைகூவல்படி, 30.10.2018 அன்று சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் தர்ணா காலை 10.00 மணிக்கு துவங்கும். தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய கூட்டமைப்பின் போராட்ட பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும்