04.10.2018 அன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், நமது நீண்ட நாள் கோரிக்கையான, 01.01.2007க்கு பிறகு பணியில் சேர்ந்த TTA அல்லாத தோழர்களுக்கும் TTA தோழர்களுக்கு வழங்கியது போல், ஒரு கூடுதல் இன்க்ரீமெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது. மேலும், காசுவல் தொழிலாளர்களுக்கும், பணி கொடை, GRATUITY, வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது.
====================================================================
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக 2017ம் ஆண்டிற்கான JE இலாக்கா போட்டி தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
====================================================================
28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு முடிவுகளில் மிக மோசமான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மதிப்பெண்களில் தளர்வை தரவேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கடுமையாக வாதாடி வந்தது. 10.07.2018 அன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களிடமும் இதே பிரச்சனை விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர் சங்கத்தின் கடுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக சில நாட்களுக்கு முன் கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான உத்தரவினை பிறப்பித்தது. அந்த உத்தரவின் காரணமாக 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. BSNL உருவான இந்த 18 ஆண்டு காலத்தில் இலாகா தேர்வில் மதிப்பெண்கள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 22 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நமது சேலம் மாவட்டத்தில் இதன் பலனாக வெற்றி பெற்ற தோழர்கள் R . குணசேகரன், M . அப்துல்லாகான் ஆகியோருக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
====================================================================
மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான, 7வது ஊதிய மாற்ற குழு கூட்டம், 09.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அநேகமாக, அன்று ஒப்பந்தம் கூட கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
=====================================================================
நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க கார்ப்பரேட் அலுவலகம் சில மாதங்களுக்கு முன், உத்தரவு வெளியிட்டது. நமது மாவட்ட சங்கத்தின் கடுமையான போராட்டங்களால் சேலம் மாவட்டத்தில் ஒரு ஒப்பந்த ஊழியர் கூட வேலை இழக்கும் நிலை ஏற்படாமல் பார்த்து கொண்டோம். நாடு முழுவதும் உள்ள நிலவரத்தின் அடிப்படையில், நமது மத்திய சங்கம் 11.07.2018 கடிதம் மூலம் சில மாற்று யோசனைகளை முன் மொழிந்தது. அதாவது, அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு பதிலாக, விற்பனை பகுதிகளில் வேலைக்கு அமர்த்தலாம் என ஆலோசனை வழங்கியது. நமது மத்திய சங்கத்தின் கோரிக்கையை அப்படியே ஏற்று, நமது கடிதத்தை ENDORSE செய்து அனைத்து மாநில தலைமை பொது மேலாளர்களுக்கும் கருத்து கேட்டு, கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. நமது தொலை நோக்கு பார்வையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்