நமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம், உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் ALTTC பயிற்சி மையத்தில், 22.10.2018 மற்றும் 23.10.2018 ஆகிய தினங்களில் சிறப்பாக நடைபெற்றது.
செயற்குழுவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சுருக்கமாக:
01. அனைத்து மத்திய சங்கங்கள் சார்பாக 2018 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், BSNLEU சங்கமும் கலந்து கொள்வது. போராட்டத்தை BSNL அரங்கில் வெற்றி பெற செய்வது.
02.24.02.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர், AUAB கூட்டமைப்பின் தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற ஏற்படும் கால தாமதத்தை செயற்குழு கவலையோடு பரிசீலித்தது. AUAB போராட்ட இயக்கங்களை வலிமையாக நடத்துவது, ஊழியர்களை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயார் படுத்துவது என செயற்குழு முடிவு எடுத்துள்ளது.
03. ஊழியர்களுக்கு செய்யப்படவேண்டிய மூன்றாவது ஊதிய மாற்றத்தில், வீட்டு வாடகை படியை (HRA) முடக்குவது என்ற நிர்வாகத்தின் முன்மொழிவை செயற்குழு நிராகரித்தது. HRAவுடன் ஊதிய மாற்றத்தை விரைந்து இறுதிபடுத்த செயற்குழு நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
04. BSNL புத்தாக்கத்திற்கு உதவும் வகையில் BSNL நிறுவனத்திற்கு, 4G அலைக்கற்றை உடனடியாக வழங்க வேண்டும் என செயற்குழு கோருகிறது.
05. BSNL நிறுவனத்தின் நிதியை சேமிக்கும் விதத்தில், மின்சாரம், வண்டி வாடகை, செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் தேவையற்ற செலவுகளை குறைக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
06. "BSNL சேவை உங்கள் வாயிற்படியில்" திட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்ய ஊழியர்களை செயற்குழு கேட்டு கொள்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்