BSNLEU-TNTCWU சேலம் மாவட்ட சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக, மாவட்டம் முழுவதும் கேபிள் பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், வங்கிக்கு அனுப்பபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
மூன்று ஒப்பந்ததாரர்கள், நமது மாவட்டத்தில் மண்டல வாரியாக ஒப்பந்தம் எடுத்து, இயங்கி வருகிறார்கள்.
அந்த ஒப்பந்ததாரர்கள்:
01. ஸ்ரீ வாரி நிறுவனம்
02. மல்லி பாதுகாப்பு நிறுவனம்
03. ராஜா நிறுவனம்
அதன் அடிப்படையில், நகர பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 8.33 அடிப்படையில், அதிகபட்சமாக, ரூ.12,488.00 வரை (15 மாதங்களுக்கு) கிடைக்கும்.
உதாரணம்:
தோழர் G. சந்திரன், CLR, சேலம் செவ்வை பகுதி, ரூ. 12,488.00
ஊரக பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ் ரூ.7000/- என்ற அடிப்படையில், ரூ.7,652.00 வரை (13 மாதங்களுக்கு) கிடைக்கும்.
உதாரணம்:
1. தோழர் P . செல்வம், CLR, ராசிபுரம் ரூ.7,652.00 (328 நாட்கள்)
2. தோழர் R. பிரபு, CLR ஆத்தூர் ரூ.7,536.00 (323 நாட்கள்)
3. தோழர் R. மனோகரன், CLR, நாமக்கல் ரூ.7,489.00 (321 நாட்கள்)
House keeping தோழர்களுக்கு ஒரிரு நாளில் பட்டுவாடா நடைபெறும். கிளை செயலர்கள் தங்கள் பகுதி தோழர்களுக்கு சரியான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா, என சரிபார்த்து, தவறும் பட்சத்தில் மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
வாழ்த்துக்களுடன்,
E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU